இந்த புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையான நேற்று புனித மக்காவில் ஜும்மா தொழுகையின் பின் பெய்த கடும் மழை அருளாக மக்களால் பார்க்கப்படுகின்றது.
புனித மக்காவில் வெப்பநிலை 43 பாகை செல்சியஸ்சாக காணப்பட்ட வேளையில் இந்த பெரும் மழை நூறாயிரக்கணக்கான யாத்திரீர்களுக்கு ஒரு வரவேற்கத்தக்க நிவாரணமாக காணப்பட்டது.
நேற்று முற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பமான இந்த மழை தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலத்திற்கு நீடித்தது.
இந்த மழையால் புனித பள்ளிவாயலின் கம்பளங்கள் நனைந்ததோடு பல மாவட்டங்கள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கிக் காணப்பட்டது.
700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தண்ணீர் வடிகட்டி இயந்திரங்களின் உதவியுடன் புனித வளாகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டனர்.




Post a Comment