ஆசியாவின் வியற்பிற்குறிய நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதியின்
திட்டத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிய வேண்டுமென்று கண்டி
ஜனாதிபதி மாளிகையில் வைத்து முஸ்லிம்கள் பிராத்தனை புரிந்தனர்.
(3.8.2013) இன்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்ற நோன்பு திறக்கும்
'இப்தார்' நிகழ்வின் போது கண்டி சிட்டி ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவர்
மௌலவி எம்.எப்.பஸ்லுல் நடத்திய துவாப் பிராத்தனையின்போது இவ்வாறு பிராத்தனை
புரிந்தார்.
அங்கு அவர் பிராத்தனைக்கு முன் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
தான் தபால் நிலையத்திற்கு சிவ தினங்களுக்கு முன் ஒரு கடிதத்தை பதிவுத்
தபாலில் இடச்சென்ற சமயம் அதற்கு 55 ரூபா முத்திரை ஒட்டும்படி ஒரு பெண்
ஊழியர் தெரிவித்து விட்டு பின்னர் தமது மேலதிகாரியுடன் கதைத்து விட்டு
'தாங்கள் சமய ஸ்தாபனம் ஒன்றைச் சேர்ந்தவரல்லவா? நீங்கள் உலமா சபையைச்
சேர்தவரே. எனவே சமய நிறுவனங்களுக்குறிய கட்டணமான 30 ரூபாயைச் செலுத்தினால்
போதும்' என்று இரண்டு பெண் பௌத்த பெண் மணிகளிலும் வேண்டிக் கொண்ட
சந்தர்பத்தை நினைவு கூர்ந்தார். இது ஜனாதிபதி காட்டி உள்ள வழிமுறை என்றும்
இவ்வாறே இலங்கையில் சகலருக்கும் சம அந்தஸ்த்து வழங்கப் படுவதாகவும்
தெரிவித்தார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் யுத்த வெற்றியை அடுத்து உரையாற்றிய ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ அவர்கள் 'எனக்கு முதலாவதும் தாய்நாடு! இரண்டாவும் தாய்நாடு!
மூன்றாவதும் தாய்நாடு!' என்று கூறிய வார்த்தை எம் எல்லோரையும்
புல்லரிக்கச் செய்தது என்பதையும் நினைவு படுத்தினார்.
அதேபோல் மௌலவி எச்.சலாகுதீனின் மறைவின் பொழுது முதலாவது கிடைக்கப் பெற்ற
அனுதாபச் செய்தி ஜனாதிபதியின் அனுதாபச் செய்தியாக இருந்தது. இவ்வாறு பல
வழிகளிலும் ஜனாதிபதி எம்மை வழி நடத்துகின்றார். முன்மாதரியாக இருக்கிறார்.
அது மட்டுமல்ல ஒரு நோன்பாளிக்கு எவன் நோன்பு திறக்க உதவுகிறானோ அவனுக்கு
மறுமையில் பல்வேறு கூலிகளை அல்லாஹ் வைத்துல்லான். 'ரைஹான்' என்ற வீ.ஐ.பி.
வாசல் மூலம் சுவர்க்த்தை சென்றடையும் மக்களுக்கு உணவளிக்கும் பாக்கியத்தை
நல்கிய ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி கிடைக்க தாம்
பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எகிப்தைச் சேர்ந்த காரி ஹாலிக் பின் மிசிரி ன் கிராத்துடன் ஆரம்பமான
இந்நிகழ்வுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூவின மக்களும், பிரதமர்
டி.எம்.ஜயரத்ன, அமைச்சர்களான ரவூப் ஹகீம், பௌசி, பசீர் சேகுதாவூத், பிரதி
அமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ், மற்றும் அப்துல்காதர், பாராளுமன்ற
அங்கத்தவர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், லொகான் ரத்வத்தை, முன்னாள் மத்திய மகாண
முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, முஸ்லிம் சமய விவகார திணைக்களப் பணிப்பாளர்
முஹமட் சமீல், ஜனாதிபதியின் முஸ்லிம் விவகார ஆலோசகர் அஸ்லம் மௌலனா உற்பட
இன்னும் பலரும், மாகாண சபை அங்கத்தவர்கள், பிரதேச சபை அங்கத்தவர்கள்
அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர். அங்கு இராப்போசனமும்
வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அஸ்வர் ஹாஜியாரிடம் தமிழ்ப் பெண்களை விமர்சித்தது தொடர்பாக வினவிய போது; 30 வருட காலமாக ஒடுங்கியிருந்த தமிழ்ப் பெண்கள் இன்று பூவும், பொட்டுமாக சுதந்திரமாக நடமாடும் சுமுகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளமை பற்றியே தான் கூறியதாகவும், தான் ஒரு கருத்தைக் கூறும் போது தமிழ் கட்சிகளும், ஊடகங்களும் அதனை எப்பொழுதும் திரிபு படுத்துவதாகக் கூறிய அவர் மேலும், இது குறித்து மறுப்பறிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
.bmp)
Post a Comment