குடிநீர் பிரச்சினையை முன்வைத்து வெலிவேறியவில் நடத்தப்பட்ட
ஆர்ப்பாட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தாம் மீண்டும் உணவுத்
தவிர்ப்பில் ஈடுபடவிருப்பதாக, கல்ஒலுவ சிறி சம்போதி விகாராதிபதி தெரீபெஹெ
சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அவர் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த போதும், சர்ச்சைக்குறிய
தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து அவரது போராட்டம்
கைவிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் தாம் மீண்டும் போராட்டம் நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஆர்ப்பாட்ட நடத்தப்பட்ட பகுதிக்கு இன்றைய தினம் கத்தோலிக்க
ஆயர்களின் குழு ஒன்று விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு இன்றைய தினம் எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இதேவேளை வெலிவேறியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவத்தினர்
நடத்திய தாக்குதலில் காயமடைந்தவர்களுள் 8 பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய
வைத்தியசாலையில;சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சம்பவத்தில் ஒருவர்
கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. sfm

Post a Comment