எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனியாக
போட்டியிட எதிர்பார்ப்பதாக இருந்த போதிலும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்
தெரிவிக்கப்படுவதாக அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
வடக்கில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் தம்
கட்சியின் மீது பிரயோகிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருந்த போதிலும்,
அந்த யோசனையை நிராகரித்துடன், தனித்தே போட்டியிட ஸ்ரீ லங்கா முஸ்லீம்
காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில், வடக்கில் எமது கட்சி போட்டியிடுவது, தமிழ் தேசிய
கூட்டமைப்பிற்கு துணைபோகும் கட்சியாகவும், தென் இலங்கையில் அரசாங்கத்திற்கு
துணைபோகும் கட்சியாக செயல்படுவதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துகிறார்கள்
எனவும் குறிப்பிட்டார்.
இது தவிர, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசிற்கு மக்களிடம் உள்ள நன்மதிப்பை
கண்டு அச்சங்கொண்ட சிலரே இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும்
அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Post a Comment