கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பாக கிண்ணியா பிரதேச உலமாக்கள்,
முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்புகொண்டு கிண்ணியாவில் புனித நோன்புப்
பெருநாளுக்கான பிறையை கண்டதாகவும், எனவே வியாழக்கிழமை நோன்புப் பெருநாளை
கொண்டாட ஏற்பாடு செய்யும்படியும் தொடர்ச்சியாக வலியுறுத்துவதாக ரவூப்
ஹக்கீமின் சகோதரர் டாக்டர் ஹபீஸ் சற்றுமுன்னர் தெரிவித்தார்..
கிழக் மாகாண அமைச்சர் ஹபீபீஸ் நசீர் அஹ்மட தனது திணைக்கள அதிகாரிகள மற்றும்
உத்தியோகத்தர்கள் சிலரும் இவ்வாறு பிறையை கண்டதாக ரவூப் ஹக்கீமிடம்
சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கிண்ணியாவைச் சேர்ந்த ஹசன் மௌலவியும்
பிறை கண்டதற்கான ஆதாரத்தை ரவூப் ஹக்கீமிடம் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் ரவூப் ஹக்கீம், ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி
முப்தியுடன் தொடர்புகொள்ள முயற்சித்தும் பயன் தரவில்லை எனவும்,
இருந்தபோதும் ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல்
மேற்கொண்ட தீர்மானத்தை தாம் மதிப்பதாகவும் ரவூப் ஹக்கீம் கூறியதாக
நீதிமைச்சின் ஊடகச் செயலாளரும், ரவூப் ஹக்கீமின் சகோதரருமான டாக்டர் ஹபீஸ்
கூறினார்.
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமய விவகார அமைச்சராக இருந்தபோது, பிறை கண்டமை
தொடர்பில் பிரச்சினை தோன்றவே ஸஹர் நேரத்தில் புனித நோன்புப் பெருநாளுக்கான
அறிவிப்பு ஒருமுறை வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment