
கொழும்பு தெற்கு துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய கொள்கலன் களஞ்சியசாலை மற்றும் இறங்குதுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த களஞ்சியசாலை சீனாவின் நிதி உதவியுடன் சுமார் 1000 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வருடத்துக்கு 2.5 பில்லியன் கொள்கலன்களை ஏற்றி இறக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கலன் களஞ்சியசாலை மற்றும் இறங்குதுறை திறந்து வைக்கப்படுவதன் மூலம் கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவு ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரிக்குமென அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆசியாவின் ஆச்சரியமிக்க பயணத்தை நோக்கி செல்லும் இலங்கைக்கு ஒரு பாரிய பலமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது .
Post a Comment