குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த ரத்துபஸ்வல பொதுமக்களை சுடுமாறு கட்டளையிட்டது யார் என்பதை தெரியப்படுத்துமாறு ஊடக அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுதந்திர ஊடக அமைப்பின் செயலாளர் சுனில் ஜயசேகர கவலை வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள போதும் வெரிவேரிய சம்பவம் குறித்து உரிய முறையில் அறிக்கையிட ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த றுகுனகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவ்வாறாயின் அந்த அடையாள அட்டையை வைத்திருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் எனவும் அன்றைய தினம் இரவு ஊடகவியலாளர்கள் பலர் மறைந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானதாகவும் லசந்த றுகுனகே குறிப்பிட்டுள்ளார்.
எனவே இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
(அத தெரண - தமிழ்)
Post a Comment