
மூன்று மாகாண சபைத் தோ்தலில்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது. ஆனால், அந்த முடிவை தான் விரும்பவில்லை என்றும், ஆனாலும் காங்கரஸ் எடுத்த தீா்மானத்தை பின்னா் தான் ஏற்றுக் கொண்டதாகவும் அமைச்சா் பசீா் சேவகுதாவுத் தெரிவித்துள்ளார்.
தனித்து போட்டியிடுவதனால் அரசாங்கத்துக்கு எதிரகவே தோ்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும். என்றும் அமைச்சா் பதவியை வதை்துக் கொண்டு அவ்வாறு அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை செய்ய முடியாது என்றும் அமைச்சா் பசீா் சேகுதாவுத் கூறியுள்ளார்.
மனச்சாட்சிப்படி அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டுத்தான் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஆகவே, அமைச்சுப் பதவியில் இருந்து விலக தீா்மானித்துள்ளதாக அமைச்சா் பசீா் சேகுதாவுத் கூறியுள்ளார்.
தான் ஏற்கனவே கூறியதன் பிரகாரம் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் உயா் பீடம் எடுத்த தவறான முடிவினால் இந்த நிலை ஏற்பட்டது எனவும் அமைச்சா் தெரிவித்துள்ளார்.
ஆனால், எப்போது இராஜினாமா செய்வது என்பது குறித்து அவா் எதுவும் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment