
பெரும் பிரமாண்டமான பிரச்சார நடவடிக்கையின் கீழ் மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் அமைக்கப்பட்டது.
அதிக நிதி செலவில் நிர்மாணப்பட்ட விமான நிலையம், எதிர்பார்த்த பலனை அளிக்காத பட்சத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில் மத்தல விமான நிலையத்தை சிலர் நகைச்சுவையாக நோக்குகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறைபட்டுள்ளார்.
எனினும், விமான நிலையத்தின் ஊடாக நாடு அடைந்துள்ள நன்மைகளை எவரும் கண்டுகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப முடியாத விமானங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இன்று அந்த நிலை மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தற்போது இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்
கொழும்புத் துறைமுகம் சர்வதேச தரத்தில் காணப்படுவதாகவும் ஹம்பாந்தோட்டையில் மற்றுமோரு விமான நிலையம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்போதும் இன்றைய நிலையை நினைத்து செயற்பட வேண்டாம் எனவும் எதிர்காலத்தை நினைத்து செயற்படுமாறுமே தாம் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment