சட்டம் ஒழுங்கு அமைச்சு என்ற பெயரில் புதிதாக அமைச்சு ஒன்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் பொலிஸ் துறை புதிய அமைச்சின் கீழ் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, போருக்குப் பின்னர் சிவிலியன் விவகாரங்களை கையாளும் பொலிஸ் பிரிவை, அரச படைகளை கையாளும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து பிரித்து தனியாக இந்த புதிய அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இலங்கை நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் இந்த அமைச்சின் செயலராக பணியாற்றுவார்.
முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாக சேவையில் பதவி வழங்கப்படுகின்றமை ஆரோக்கியமானதல்ல என்பது தமது நிலைப்பாடு என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஆனால் பாதுகாப்பு செயலாளரின் அதிகாரம் குறையாது அவரது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த முன்னாள் இராணுவ அதிகாரிக்கு புதிய அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறை கைதிகள் தொடர்பான விடயத்தை இந்த அமைச்சின் கீழ் கொண்டுவர முடியாது. அதற்கென்று வேறு அமைச்சு உள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம் என்பவற்றை நீதி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அது குறித்தும் அரசாங்கம் ஆராயலாம் என ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
@BBC

Post a Comment