
கிரண்ட்பாஸ் – சுவர்ணசிட்டி வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது சற்று நேரத்திற்கு முன்னர் காடையர் கூட்டமொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. மஹ்ரிப் தொழுகை நேரத்திலேயே இந்த தாக்குதலை காடையர் கூட்டமொன்று மேற்கொண்டுள்ளது. அருகிலுள்ள சில முஸ்லிம் வீடுகளும் இதன்போது தாக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். இணையத்திடம் கூறினார்.
அத்துடன் பள்ளிவாசலுக்கு முன் வெளியே 100 க்கும் மேற்பட்ட காடையர்கள் கூடியிருப்பதாகவும், பள்ளிவாசல்கள் மீது மேற்கொண்ட தாக்குதலினால் பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும், அருகிலுள்ள முஸ்லிம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானும் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
கிராண்ட் பாஸ் தாக்குதல் : ரிஷாத் பதியுதீன்,ரவுப் ஹகீம், அசாட் சாலி கண்டனம் !
Post a Comment