அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் விரைவில் நியமிக்கப்படவுள்ள பிரதி அமைச்சர்கள் பதவி தொடர்பில் கருத்துக்கள் பறிமாறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகி்ன்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று பிரதி அமைச்சுப் பதவிகளைத் தரவேண்டும் என ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரி்க்கை முன்வைத்ததாகவும், இரண்டு பிரதி அமைச்சுக்களை தமது கட்சிக்குத் தருவதானால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும் என்றும் இல்லாது விட்டால் எந்தவித அமைச்சுப் பதவியும் தேவையில்லை எனவும் ஹக்கீம் கூறியுள்ளாராம்.
கட்சிக்குத் தெரியாமல் எந்தவித அமைச்சுப் பதவிகளையும் தமது கட்சி உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டாம் என ஹக்கீம் ஜனாதிபதியிடம் அளுத்தமாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறையாவது அம்பாரை மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்கள் விரும்பியுள்ள நிலையி்ல் ஹக்கிம் ஏமாற்றுவார் என்ற கதையும் பரவலாக பேசப்படுகின்றது.
பொறுத்திருந்து பார்ப்போம். அமைச்சுப் பதவிகள் கிடைக்குமா? அல்லது கிடைக்காமல் விடுமா?
Post a Comment