மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என அக்கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இதுவரையிலும் நடத்தப்பட்ட எந்தவொரு பிரசார கூட்டங்களிலும் அக்கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் இதுவரை கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் புத்தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளரை கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, அக்கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூதை முன்னணி இணையத்தளம் ஒன்றுக்கு தொடர்புகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டம் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா என வினவுகையில் அதற்கு ஆம் என்றார்.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறுவதன்றால் அந்தக்கட்சியை முற்றாக அழித்துவிட்டுத்தான் வருவேன் என்றும் ஹக்கீமுக்கு விரைவில் தகுந்த பாடத்தைப் புகட்டுவேன் எனவும் அமைச்சர் பசீர் சேகுதாவுத் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாகவும் கதைகள் கசிந்துள்ளது.
Post a Comment