சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நாளை வியாழக்கிழமை
நடைபெறவுள்ள நிலையில், அக்கடசியின் தவிசாளராக உள்ள பசீர் சேகுதாவூத்
குறித்து ஆராய்வதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் நிகழ்ச்சி நிரலில்
இடம்பெறவில்லையென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஜப்னா
முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
சில ஊடகங்கள் முஸ்லிம் காங்கிரஸில் பிளவை ஏற்படுத்தி குளிர்காய
முயலுகின்றன. அதற்கு நாம் இடமளிக்க கூடாது. முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும்
நெருக்கடியான இவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸில் பிளவு ஏற்படுவதை கட்சிப்
போராளிகள் விரும்பமாட்டார்கள். அதேநேரம் கட்சிக் கட்டுப்பாடும்
மிகமுக்கியமானது.
Post a Comment