
மத வழிபாட்டுத் தலங்களை தகர்த்துவிடுவது மிகவும் கவலைக்குரியதாகும்.
அநுராதபுரம் மல்வத்துஓயா பள்ளிவாசல் இவ்வாறு தகர்க்கப்பட்டமையை அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமாசபை வன்மையாகக் கண்டிக்கிறது என உலமா சபையின் பொதுச்
செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் தெரிவித்தார்.
மல்வத்துஓயா பள்ளிவாசல் தகர்க்கப்பட்டுவிட்ட செய்தியறிந்ததும்தான் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் கேசரிக்குக் கூறினார்.
இதேவேளை, மல்வத்துஓயா பள்ளிவாசல் இமாம் மொஹமட் அஸ்மிர் சம்பவம் தொடர்பில்
கருத்து தெரிவிக்கையில் பிற்பகல் 2.30 மணியளவில் அநுராதபுரம் மாநகர
சபையிலிருந்து வந்த ஊழியர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் பள்ளிவாசல்
தகர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
பள்ளிவாசலுக்குள்ளிருந்த குர்ஆன் மற்றும் பள்ளிவாசலுக்குச் சொந்தமான
பொருட்களை மீட்டுக் கொள்வதற்குக் கூட அவகாசம் வழங்கப்படவில்லை என்றார்.
Post a Comment