
எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்துள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் நவநீதம் பிள்ளையைச் சந்திப்பதற்கான இணக்கத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் தெரிவித்துள்ளதாக விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பு தொடர்பில் ஹக்கீம் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;-
சந்திப்பின் போது நவநீதம்பிள்ளையிள் கேள்விகளுக்கு நீதியமைச்சர் என்ற வகையில் நியாயமான முறையில் பொறுப்புணர்ச்சியுடன் பதிலளிக்கவுள்ளேன். சிறுபான்மை மக்கள் தொடர்பான கேள்விகளுக்கு அதற்கான தெளிவினை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன்.
நான் நீதியமைச்சர் என்ற வகையில் நீதித்துறை தொடர்பான கேள்விகள் கேட்கப்படலாம். வழக்குகள் காலதாமதமாகுவதற்கான காரணங்கள், சட்டத்துறை தொடர்பான விளக்கங்கள் என்னிடம் கோரப்படலாம் நீதியமைச்சர் என்ற வகையில் நான் பொறுப்புணர்ச்சியுடன் பதிலளிக்க வேண்டியுள்ளது. நான் அனைத்துக்கும் தயாராகவே இருக்கின்றேன் என்றார்.
Post a Comment