கொழும்பு - கிரண்ட்பாஸில் சட்டரீதியாக இயங்கிவரும் பள்ளிவாசலை மூடுவதற்கு
அனுமதிக்க முடியாதென மேல் மாகாண சபையின் உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா
முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
கிரண்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளிவாசல்
விவகாரம் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு
தகவல் வழங்கிய அவர் மேலும் கூறியதாவது,
குறிப்பிட்ட பள்ளிவாசல் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு, இன்று
வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது. அருகிலுள்ள
பௌத்த விகாரைதான் சட்டரீதியற்ற நிலையில் இயங்குகிறது. இந்த சட்டரீதியற்ற
பௌத்த விகாரையிலிருந்து வந்தவர்கள், சட்ட ரீதியாக இன்று திறக்கப்பட்ட
பள்ளிவாசல் மூடப்பட வேண்டுமென்கின்றனர். இவ்வாறான பௌத்த இனவாத
அச்சுறுத்தலுக்கு அடிபணிவோமாயின் அல்லது இந்த அராஜகத்தை அரசாங்கமும்,
பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் நிறுத்தவில்லையாயின் நாட்டிலுள்ள அனைத்து
பள்ளிவாசல்களையும் மூடவேண்டிவரும்.
குறித்த பள்ளிவாசல் தற்போது மூடப்பட்டுள்ளது. அந்த பள்ளிவாசலின் திறப்புகளை
கைப்பற்றிக்கொள்ள பௌத்த தேரர்கள் முயன்று தோல்வியடைந்துள்ளனர். குறித்த
பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதை ஏற்கமுடியாது. இதற்கு உடனடித்த
தீர்வுகாண வேண்டும். இதனை உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்
எனவும் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
Post a Comment