மஹியங்கனையில் மிகவும் திட்டமிட்ட முறையில் பொதுபல சேனா தனது இனவாத
பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கையில் அங்குள்ள முஸ்லிம் கடைகள்
சிலவற்றுக்குச் சென்றுள்ள பொதுபல சேனாவின் ரீசேர்ட் அணிந்தவர்கள் நீங்கள்
கடைகளை மூடவேண்டும், அல்லது நாங்கள் உங்கள் கடைகளை தீயிட்டு கொளுத்துவோம்
என எச்சரித்துள்ளனர்.
பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார்.
தமது உறவினரின் கடைக்கும் வந்த பொதுபல சேனாவின் தீவிர ஆதரவாளர்களே இவ்வாறு
அச்சுறுத்தி விட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 2 ஆம் திகதி பொதுபுல சேனாவின் மாநாடு மஹியங்கனையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment