மத்திய மாகாண நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து மலையக
தேசிய முன்னணி என்ற பெயரில் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு
எதிர்வரும் 01ஆம் திகதி வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் என்று மலையக
மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவுத் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் எம்.பி.
நேற்று தெரிவித்தார்.
முன்னணியில் மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தொழிலாளர்
விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிய இடதுசாரி முன்னணி
ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து வேட்பாளர்களை நிறுத்துகின்றன.
பிரஜைகள் முன்னணியும் மலையக தேசிய காங்கிரசும் இணைந்து கொள்ள தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வடமாகாணத்தில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கேட்குமாயில்
மரச்சின்னத்திலோ அல்லது பொதுவான சின்னத்திலோ போட்டியிட வேண்டும் என
முஸ்லிம் காங்கிரஸ் கூறி வருகின்ற நிலையிலேயே மத்திய மாகாணத்தில் மண்வெட்டி
சின்னத்தில் போட்டியிட தீர்மாணித்துள்ளது.
Post a Comment