அண்மைக்காலமாக கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் இஸ்தம்பித நிலையில் இருந்து வருவதனால் அதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கண்டியில் நாளை மாலை (13) சனிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்களையும், ஆழும் கட்சி உறுப்பினர்களையும் ஜனாதிபதி நேரில் சந்தித்துப் பேசவுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினனொருவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆழுமை அற்றவராக செயற்பட்டு வருவதும், அளவு கடந்த ஆழுனரின் தலையீடுகள் போன்ற காரணங்களை தெரிவித்து ஆழும் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் கபை நடவடிக்கைகளை பகிஸ்கரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலபரம் தொடர்பில் சென்ற மாதம் கொழும்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்காததனையிட்டே தற்போது ஜனாதிபதி மற்றும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment