Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஊழலில் முதலிடத்தில் இருப்பதாகத் தகவல்

Friday, July 120 comments

 
அண்மையில் வெளியிடப்பட்ட உலகளாவிய ரீதியில் பொது நிறுவனங்களில் நிலவும் ஊழல் தொடர்பான கணக்கெடுப்பு முடிவொன்றின் அடிப்படையில், மக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட பல பொது நிறுவனங்கள் அதிக ஊழலுடன் விளங்குவது வெளிவந்துள்ளது. இலங்கையில் பொலிஸ் திணைக்களம் இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Transparency International நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய ஊழல் நிலைகாட்டியின் அடிப்படையில், 64% இலங்கையர்கள் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் பொலிஸ் திணைக்களமே அதிக ஊழல் கொண்டுள்ள நிறுவனம் என்றும் நம்புகின்றனர்.

18% மக்கள் ஊழல் குறைந்து வருவதாகவும், மேலும் 19% ஆனோர் ஊழல் மாறாமல் இருப்பதாகவும் கருதுகின்றனர்.

கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட எட்டு சேவைகளில் பொலிஸ் மற்றும் சட்டத்துறைகளே சர்வதேச ரீதியில் அதிகளவு லஞ்சம் ஆட்கொண்ட நிறுவனங்களாக விளங்குகின்றன.

இலங்கையில் 64% கணிப்பீட்டுக்கு உட்பட்டவர்கள் பொலிஸ் திணைக்களமே அதிக ஊழலுக்கு உட்பட்டதாக உணரும் அதே வேளை சர்வதேச ரீதியில் கணிப்பீட்டின் படி 31% மக்கள் பொலிசாருக்கு லஞ்சம் வழங்கியுள்ளனர்.

எவ்வாறெனினும் இலங்கையில் கருத்துத் தெரிவித்த 21 சதவீதமானோர் சட்டத்துறையே அதிகம் ஊழலுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்தனர், இது உலகளாவிய சராசரியான 24 சதவீதத்துக்கு சற்று குறைவானதாகும்.

உலகில் அரசியல் கட்சிகள் அதிக ஊழல் நிலவும் நிறுவனங்களாக காணப்பட்டன. இலங்கையில் கருத்துத் தெரிவித்த 51 சதவீதமானோர் அரசியல் காட்சிகளில் ஊழல் நிலவுவதை ஏற்றுக்கொண்டனர்.

கடந்த ஒரு வருடத்தினுள் கருத்துத் தெரிவித்தவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட எட்டு சேவைகளில் எதற்கு லஞ்சம் வழங்கியுள்ளார் எனக் கேட்கப்பட்ட போது, 43 சதவீதமானோர் பொலிசுக்கும், 22 சதவீதமானோர் நீதித் துறைக்கும் என பதிலளித்தனர்.

அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கிறதா என்று கேட்டதற்கு 38 சதவீதமானோரே அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமானவை என்றனர், 47 சதவீதமானோர் அவை வினைத்திறன் அற்றவை என்றனர்.

4 சதவீதமானோர் மட்டுமே தற்போதைய அரசாங்கம் சுயலாபத்துக்காக இயங்கும் ஒருசில பெரிய அமைப்புகளால் வழிநடத்தப்படவில்லை என்றனர். அத்துடன் 84 சதவீதமானோர் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை என்றனர்.

இந்த அறிக்கையின்படி இலங்கையில் கருத்துக்கணிப்புக்கு உட்பட்டோரில், 72 சதவீதமானோர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் சாதாரண மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதிய அதே வேளை, 81 சதவீதமானோர் இவ்விடயத்துக்கு பங்களிப்பு செய்யவும் விரும்புகின்றனர். இந்த சதவீதம் பங்களாதேசில் 100 சதவீதமாகவும் இந்தியாவில் 99 சதவீதமாகவும் இருந்தது.

107 நாடுகளில் 114,000 நபர்கள் இந்த 2013ம் ஆண்டுக்கான Transparency International நிறுவனத்தின் கணக்கெடுப்புக்கு உட்பட்டிருந்தனர்.

உலகளாவிய ஊழல் நிலைகாட்டி பின்வரும் எட்டு சேவைகளில் நிலவும் ஊழலைக் கணக்கெடுப்புக்கு உட்படுத்தியிருந்தது: அரசியல் கட்சிகள், அரச உத்தியோகத்தர்கள், பாராளுமன்றம் / சட்டவாக்கம், சட்டத்துறை, வணிகம் / தனியார் துறை, மருத்துவ மற்றும் சௌக்கிய சேவைகள், கல்வி, ஊடகம், இராணுவம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய நிறுவனங்கள்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by