Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

பொதுபல சேனாவை தடைசெய்வதற்கு நீங்களும் முறைப்பாடு செய்யலாம்

Friday, July 120 comments

http://www.navamani.lk/wp-content/uploads/2013/07/ban-bbs.jpg 
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டி செயற்பட்டுவரும் பெளத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவை தடைசெய்வதற்காக நீங்களும் முறைப்பாடு செய்யலாம்.

பொதுபல சேனாவின் செயற்பாடுகளைக் கண்டிப்போர் கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து அங்கு தங்களது முறைப்பாடுகளை பதிவுசெய்யலாம். இதற்காக 5 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படுமிடத்து இந்த விவகாரம் குறித்து ஆராயப்படும்.

முறைப்பாடு செய்வதற்கு இங்கே அழுத்துக (Click Here)

இதுவரை பொதுபல சேனா செய்துவரும் அநியாயங்கள்:
* முஸ்லிம்கள் மீது நேரடியான தாக்குதல்கள்
* முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்
* சட்டத்தை தங்களது கையிலெடுத்தல்
* ஹலால் சான்றிதழை ஒழித்தமை
* முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்
* கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்
* நிகாப் ஆடைகளை தடைசெய்யக் கோருவது
* மாடறுப்புக்கான விசமப் பிரச்சாரம்
* மத்ரஸாக்கள் மீதான தாக்குதல்/ மூடுதல்
* பகிரங்கமாக கூட்டம்போட்டு முஸ்லிம்களை சாடுதல்
* முஸ்லிம் வர்த்தகத்தை பகிஸ்கரிக்குமாறு பிரச்சாரம்

இவ்வாறு நாளுக்கு நாள் பொதுபல சேனாவின் இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுகுறித்து அதிருப்தியடைந்த அனைவரும் குறித்த இணையத்தளத்துக்குச் சென்று தங்களது முறைப்பாடுகளை பதிவுசெய்து கொள்ளலாம். முறைப்பாடு செய்வது நிபந்தனைகளுக்குட்பட்டது.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by