
19 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
பம்பலபிட்டிய முஸ்லிம் வர்த்தகரின் கொலைவழக்கில் தேடப்படும் சந்தேக நபராக
வாஸ் குணவர்த்தனவின் மகன் ரவீந்து குணவர்தனவின் பெயரை குற்றப்புலனாய்வுப்
பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
வர்த்தகர் சியாமின் கொலை தொடர்பான வழக்கு இன்று புதுக்கடை 05 ஆம் இலக்க
நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே
குற்றப் ப்புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரான சாணி
அபேசேகரகுறித்த கொலை தொடர்பில் ரவீந்து குணவர்தனவை தேடி வருவதாக
தெரிவித்தார். வர்த்தகர் சியாமின் கொலையுடன் அவருக்கு நெருங்கிய தொடர்புகள்
இருப்பதாகவும் அதனாலேயே அவரை கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர்
நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனிடையே சட்டப்பிரச்சினை ஒன்றினை முன்வைத்து வாஸ் குணவர்த்தனவின்
சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஜித் பத்திரன தலைமையிலான சட்டத்தரணிகள்
வாதாடினர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக
நபர்களை சாதாரண குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் விசாரிக்க கோரினர்.
அத்துடன் இரு சட்டப்பிரிவுகளின் கீழும் விசாரணை செய்யும் அதிகாரம் குற்றப்
புலனாய்வுப் பிரிவினருக்கு இல்லை என அவர்கள் வாதிட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை நீதவான் வினவிய
நிலையில் அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று வழக்கின் அட்டுத்த
தவணையில் பதிலலிப்பதாக பிரதி பொலிஸ் அத்தியட்சகர் சாணி அபேசேகர
நீதிமன்றில் தெரிவித்தார். இதனை அடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு
வழக்கினை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் சட்டமா அதிபரின் அறிக்கையையும்
சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.
Post a Comment