13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் நோக்கிலான
பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை (09) முதன்முறையாக கூடவுள்ளது. நாளை (09) பிற்பகல் 3 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இத் தெரிவுக் குழுவில் 31 பாராளுமன்ற
உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள போதும் இதுவரை 19 பேரே
இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக் குழுவில்
பங்கேற்பதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளன.
அதேவேளை இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
சிவ்சங்கர் மேனன் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். சிவசங்கர மேனனை தமிழ்
தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்துள்ளர் . இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரசையும் சந்தித்து பேசவுள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் உயரதிகாரிகையும்
சந்திக்கவுள்ளார்
Post a Comment