பிள்ளைகளை தொலைபேசியும் “பேஸ் புக்”களுமே தவறான வழிக்கு இட்டுச் செல்ல
வழிவகுக்கின்றன. இதனை குறிப்பாக மாணவ சமுதாயத்தினர் புரிந்து செயற்பட
வேண்டும். அதிலும் பெண் பிள்ளைகள் இத்தகைய செயற்பாடுகளால் தங்களது
எதிர்காலத்தை வீணடித்துக் கொள்ளக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்தார்.
மாணவ பருவத்தில் ஒரு நிமிடத்தையேனும் வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்றிக்
கொள்வதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி நவீனத்துவம்
என்பது வெளிநாட்டவர் போல் நடந்து கொள்வது என்பதல்ல எனவும் குறிப்பிட்டார்.
காலி பத்தேகம கிறிஸ்து தேவ மகளிர் கல்லூரியின் 125 வது வருட நிறைவும்
பரிசளிப்பு விழாவும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம
அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு
தெரிவித்தார்.
சமாதானமாகவும் சுபீட்சமாகவும் எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு மாணவப்
பருவத்தின் செயற்பாடுகளே உறுதுணையாகின்றது. சிறு பராயத்தில் கிடைக்கும்
அனுபவங்களே எமது எதிர்காலத்திற்கு சிறந்த படிப்பினையாகிறது. தனது
வாழ்க்கையில் நாம் கற்றுக் கொண்ட பாடம் இது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பிள்ளைகளின் நண்பர்கள் தொலைபேசியோ “பேஸ்புக்” கோ அல்ல. சிறந்த நண்பர்கள்
பெற்றோர்களே “அதிலும் அம்மா தான் சிறந்த நண்பி அம்மாவிடம் நாம் அனைத்தையும்
பேச முடியும் பகிர்ந்து கொள்ள முடியும்.
பிள்ளைகளை தொலைபேசியும் “பேஸ் புக்”களுமே தவறான வழிக்கு இட்டுச் செல்ல
வழிவகுக்கின்றன. இதனை குறிப்பாக மாணவ சமுதாயத்தினர் புரிந்து செயற்பட
வேண்டும். அதிலும் பெண் பிள்ளைகள் இத்தகைய செயற்பாடுகளால் தங்களது
எதிர்காலத்தை வீணடித்துக் கொள்ளக்கூடாது. அவசியமெனவும் ஜனாதிபதி மேலும்
தெரிவித்தார். Tnw
Post a Comment