ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தின் கீழ் நாட்டிலுள்ள 25 க்கும்
மேற்பட்ட பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டோ அல்லது மூடப்பட்டோ உள்ளன. இது இந்த
அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் சாதனையாகவே நோக்குவதாக மேல்மாகாண
சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் தகவல் தருகையில்,
மாகாண அமைச்சர் ஒருவரே நேரடியாக வந்து, பள்ளிவாசலை மூடிவிடுங்கள், அங்கு
தொழாதீர்கள் என கூறிச்செல்லும் அளவுக்கு நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான
வன்முறைகளும், அதற்கு அரசாங்கத்தின் ஆசிர்வாதமும் தீவிரமடைந்துள்ளது.
அரசியலமைப்பில் மத உரிமைகள், மதச் சுதந்திரம் என எழுதப்பட்டிருந்தாலும்
நடைமுறையில் முஸ்லிம்கள் அந்த சுதந்திரத்தையும், உரிமையையும் அனுபவிக்க
முடியாதவர்களாகவே உள்ளனர் என்பதை மஹியங்கனை பள்ளிவாசல் சம்பவம் தெளிவாக
எடுத்துக்காட்டுகிறது.
இந்நிலைமை நீடித்துச் செல்வது முஸ்லிம்களுக்க அச்சுறுத்தலாக அமையும்.
ஒருபுறம் ஜனாதிபதி மஹிந்த பள்ளிவாசல்களை திறந்துவைக்கிறார். மறுபுறம்
பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. இதுதான் தற்போதைய நிலவரம் எனவும்
முஜீபுர் ரஹ்மான மேலம் தெரிவித்தார்.

Post a Comment