
மஹியங்கனை
ஜும்ஆப் பள்ளிவாசல் மூடப்பட்டதை அடுத்து பதுளை ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மா
தொழுகையைடுத்து விசேட துஆ பிரார்த்தனையொன்று இடம்பெற்றுள்ளது. இன்று
ஜும்மா பிரசங்கத்தை நடாத்திய இமாம் மௌலவி சலீம் அவர்கள் துஆ
பிரார்த்தனையும் தொழுகையையும் நடத்தியுள்ளார்.
மஹியங்கனையில் இன்று ஜும்மா பள்ளிவாசல் ஜும்ஆத் தொழுகைக்கு தயாராகி கொண்டிருந்த வேளை, பிரதேசத்தின்
ஊவா மாகாண காணி அமைச்சர் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவருடன் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு ஜும்மா தொழுகை நடாத்த வேண்டாம் எனவும், அப்படி தொழுகை நடாத்தப்படின் பிரச்சினைகள் ஏதும் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மஹியங்கனை
ஜும்மா பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகை நடைபெறவில்லை. அங்குள்ள
முஸ்லிம்கள் அருகிலுள்ள பங்கரம்மன எனும் பள்ளிவாசலுக்கு செல்ல ஆயத்தமான
போது ஒரு சிலர் அச்சம் காரணமாக வர்த்தக நிலையங்களுக்குள்ளேயே லுஹர்
தொழுகையை கடைகளை மூடி தொழுது கொண்டதுடன், இன்னும் சிலர் பங்கரகம்மனைக்கு சென்று ஜும்மா தொழுகையை நிறைவேற்றியுள்ளனர்.
தற்போது
பிரசேத்தில் பதற்ற நிலைமை காணப்படுகிறது. அடுத்த மாதம் அங்கு இடம்பெறவுள்ள
பொதுபல சேனாவின் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் தற்போது மும்முறமாக
இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே பள்ளிவாசல் பலாத்காரமாக மூடப்பட உத்தரவிடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
இது
தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரிடம் தற்போது தொடர்பு கொண்டு
வினவிய போது பொலிஸார் வருகை தந்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுகொண்டிருப்பதாக
தெரிவித்து தொலைபேசி தொடர்பை துண்டித்தார்.
பிரதேச பள்ளிவாசல் அகற்றப்படுவது சுலபமான விடயம், இருப்பினும்
அங்குள்ள முக்கிய முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களை அகற்ற
வேண்டும் என்பதும் உள்நோக்கமாக இருப்பதாக தெரிய வருகிறது.
பதுளையிலிருந்து மேற்படி கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment