வடமேல்
மாகாண சபையின் முஸ்லிம் காங்ரஸின் முன்னாள் உறுப்பினர் எஹியா ஆப்தீன்
அவர்கள் கட்சிக்கு எதிராக அம்மாகாண சபையில் 13ம் திருத்தத்திற்கு ஆதரவாக
வாக்களித்தமைக்காக இடை நிறுத்தப்பட்டிருந்து பின்னர் மு.கா.வின்
உயர்பீடத்தில் முன்தோன்றி அழாக் குறையாக தன்னை மன்னிக்கும் படி
அடம்பிடித்து தனது அரசியல் ஆரம்பமும் அந்திமமும் முடிவும் முஸ்லிம்
காங்ரஸ்தான் என கண்ணீர் மல்கிய நிலையில் பிரகடனப்படுத்தியவர்.இன்று தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டு கட்சிக்கு துரோகம் செய்த நிலையில் ஊடகங்களுக்கு முஸ்லிம் காங்ரஸ்க்கு எதிராக வசைமாரி பொழிந்;து அக்கட்சியின் கொள்கைகளை பிழையாக விமர்சிப்பது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளதென மு.கா. முன்னாள் பொதுச் செயலாளரும் மஜ்லிஸ் சூராவின் பிரதிச் தலைவருமான சட்டத்தரனி எஸ்.எம்.ஏ. கபூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
எதிர்வரும் மூன்று மாகாண சபை தேர்தலில் கட்சி தனித்துப்போட்டியிட வேண்டும் என உயர்பீடம் முடிவு எடுத்திருந்த நிலையில் அம்முடிவுக்க எதிராக விமர்சனம் செய்து தங்களது சொந்த அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக கட்சி மாறும் பச்சோந்திகளுக்கு முஸ்லிம் மக்கள் எதிர்காலத்தில் நல்ல பாடத்தை அவர்களுக்கு புகட்டுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எது எப்படியோ கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தன்னால் முடிந்தளவு எமது மக்களின் உரிமைகள் பற்றியும் அவர்களின் அன்றாட அரசியல் பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கட்சி தலைமைத்துவம் எவ்வித பிரதேச பாகுபாடின்றி நாடு பூராகவும் வாழும் முஸ்லிங்களின் தேசிய பிரச்சினைகள் தொடர்பாகவும் குரல்கொடுத்து வந்துள்ளது என்பது சரித்திர வரலாறாகும்.
இது சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளால் அங்கீகரிக்கப்பட்டு வந்த உண்மையுமாகும்.
நன்பர் எஹியா கூறுவது போன்று இக்கட்சி ஒருபிரதேசத்துக்குத்தான் சேவை செய்கின்றது என்ற குற்றச்சாட்டை நாங்கள் முற்றுமுளுதாகவும் மறுத்துரைக்கின்றோம். அவரின் மனச்சாட்சிக்கு விரோதமாக தற்போது கட்சிக்கு எதிராக பேசமுனைவதுதான் எங்களால் நம்ப முடியாமல் உள்ளது.
மேலும் தன்னை இம்முறை வடமேல் மாகாண சபையில் முஸ்லிம் காங்ரஸ் சார்பாக போட்டியிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு மன்னிப்பு கேட்ட இவர் ஒரு சில தினங்களுக்குள் இவ்வாறு பல்டீ அடித்து ஒரு பாரிய அரசியல் தற்கொலை ஒன்றை புரிவாரென்று நாங்கள் கனவில் கூட எதிர்பார்க்கவும் இல்லை” என சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்
Post a Comment