கோடிக் கணக்கில் கொடுத்து எமது உறுப்பினர்களை கொள்வனவு செய்து தேர்தல்
பிரச்சாரம் செய்யும் அளவுக்கு அரசாங்கம் வங்குரோத்தடைந்துள்ளதாக ஐக்கிய
தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரபலத்தால் வெற்றிபெற முடியுமாயின் எதற்காக தேர்தல் நடவடிக்கைக்கு இவ்வாறு ஐதேக உறுப்பினர்கள் அரசாங்கம் இவ்வாறு பலியெடுப்பதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்மூலம் அரசாங்கத்தின் வங்குரோத்துத்தனம் தெளிவாவதாக பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றி திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
எதிர்கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டு ஐதேக ஆதரவாளர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றிபெற அரசாங்கம் முயற்சிப்பதாக திஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, பதவி வரப்பிரசாதம் கொடுத்து, ஊடகமொன்றை பயன்படுத்தி விமர்சித்து ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்த முடியாது என ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கூற விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment