குவைட் நாட்டிலிருந்து சவூதி அரேபியாவிற்கு உம்ராவிற்காகச்சென்ற போது தனது
இலங்கையிலுள்ள குடும்பத்துக்கு கொண்டு வருவதற்கு பாதுகாத்து வைக்கப்பட்ட
ஸம்ஸம் நீர் பரிமுதல் செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கள்கிழமை
இடம்பெற்றுள்ளது.
குவைட்டிலிருந்து சிறிலங்காவிற்குச் சொந்தமான எயார்லைன் விமானம் ஊடாக
நேற்று திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு இலங்கை வர முயற்சித்த போது தனது
அத்தியவசிய பொருட்களுடன் ஸம்ஸம் நீர் போத்தலில் கொண்டு வந்தவேளை எயார்லைன்
விமான அதிகாரிகள் தண்ணீரை கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை என
தெரிவித்துள்ளனர்
மக்காவிலிருந்து கொண்டு வரும் ஸம்ஸம் நீரின் மகிமை இலங்கை விமான நிலைய
அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும் என நான் நினைக்கின்றேன். அங்கு
கடமையாற்றிய அதிகாரிகள் தண்ணீரைக் கண்டவுடன் பேசிக்கொண்டார்கள்.
இத்தண்ணீர் இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டுமா? இதில் ஏதோ ஒரு அதிசயம்
இருக்கின்றது எனவும் சக ஊழியரிடம் கேள்வியாக கேட்டதை அவதானிக்க முடிந்தது
எனவும் விமான மூலம் இலங்கை வந்த திருகோணமலை மாவட்டத்தைச்சேர்ந்த சகோதரர்
தெரிவித்தார்.
Post a Comment