Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கல்முனை நகர அபிவிருத்தி திட்டவரைபு தொடர்பான கலந்துரையாடல்

Wednesday, July 310 comments


IMG_7416
கல்முனை நகர அபிவிருத்தி திட்டவரைபு தொடர்பான கலந்துரையாடல் நேற்று பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நகர அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசகரும் யூ.என்.ஹப்பிடாட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளருமான இந்துநில் வீரசூரிய, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டப்லியூ.டீ.செனவிரத்ன, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை எல்லைக்குட்பட்ட திணைக்களங்களின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இங்கு கல்முனை நகரத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்ட வரைபு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு கலந்து கொண்டவர்களின் ஆலோசனைகளை பெறும் இறுதி ஆலோசனைக் கூட்டமாக இது அமைந்திருந்தது.
இதன் பின்னர் ஆலோசனைகளை உள்ளடக்கிய இறுதி நகர அபிவிருத்தி திட்ட வரைபு உருவாக்கப்பட்டு அது வர்தமாணியில் பிரசுரிக்கப்பட உள்ளது.
IMG_7402IMG_7430IMG_7423IMG_7426IMG_7442IMG_7412IMG_7449

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by