பயணிகளை ஏற்று வதற்கு முன்னர் தேவையான எரி பொருளை நிரப்பிய பின்னரே பஸ்
வண்டிகளை பஸ் நிலையத்துக்கு கொண்டுவர வேண்டும். பயணிகளை ஏற்றிக் கொண்டு
செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று
நடவடிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்து அதிகார சபையின் தலைவர் அமில
ரண்மண்டல தெரிவித்தார்.
டீசலை
நிரப்பி, ரேடியேட்டர்களுக்கு தேவையான தண்ணீரை ஊற்றி வண்டியின் நிலை
குறித்து உறுதிப்படுத்திய பின்னரே தனியார் பஸ்கள் சேவையை ஆரம்பிக்க
வேண்டும் என்று மேல் மாகாண தனியார் பஸ் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்
அமில ரண்மண்டல தெரிவித்தார்.
பயணிகளை
ஏற்றிக் கொண்டு பயணிக்கும் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனத்தை
நிறுத்தி எரிபொருளை நிரப்புவதன் மூலம் பயணிகளை அசெளகரியப்படுத்தக் கூடாது
என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு
தனியார் பஸ் சேவை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்குள்ள நேர கண்காணிப்பாளர்
அந்த பஸ்ஸில் எரிபொருள் இருக்கின்றதா, ரேடியேட்டருக்கு நீர்
நிரப்பப்பட்டுள்ளதா, டயர்கள் நல்ல நிலையில் இருக்கின்றதா என்று பரீட்சித்த
பின்னரே பஸ்கள் அங்கிருந்து புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.
Post a Comment