Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

அந்நியவர்களை அழைத்து பொய்யாக நோன்பு திறக்க வைக்காதீர்கள்-அசாத் சாலி

Wednesday, July 100 comments

 
புனித ரமழான் றமழானில் இருந்துகொண்டிருக்கும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகளே றமழான் மாதத்தின் நோன்பு காலத்தை இனப் புரிந்துணர்வு இன ஒற்றுமை என்ற பெயரில் வீணான இப்தார் ஒன்று கூடல்களில் கழிக்காமல் இந்த நாட்டில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் இன்னல்களில் இருந்து விடுதலை பெறுவதற்கான பிரார்த்தனைகளில் கழிக்குமாறு உங்களை அன்போடு வேண்டிக் கொள்கிறேன் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று இப்தார் நிகழ்வுகளை தமது சமூக அந்தஸ்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு அடையாளமாக செல்வந்தர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.சமூகப் பணியில் ஈடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் சில அமைப்புக்களும் மற்றும் ராஜதந்திர நிலையங்களும் வெறும் கூடிக்கழியும் ஒரு நிகழ்வாக எந்தப் பிரயோசனமும் இன்றி இந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.

இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் இந்த நிகழ்வுகளுக்கு அந்நிய மதத்தவர்களும் அழைக்கப்பட்டு போலியான விதத்தில் அவர்களையும் நோன்பு துறக்க வைப்பதாகும். இவ்வாறான இன்றைய இப்தார் நிகழ்வுகளின் மூலம் நோன்பின் மாண்பு கெடுக்கப்படுகின்றது.

ஒரு காலத்தில் நாம் நோன்பு நோற்பதைப் பார்த்து மற்ற சமூகங்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். எம்மை வியப்புடன் நோக்கினார்கள்.ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. இனப்புரிந்துணர்வுஇ இன ஒற்றுமை என்ற போர்வையில் நாம் நோன்பு காலத்தில் அவர்களுக்கு வழமையாக நோன்பு துறப்பதை விட மேலதிகமான உணவுப் பொருள்கனைக் கொண்டு விருந்து படைத்ததால் நோன்பை பற்றி அவர்களுக்கு இருந்த மகிமை இப்போது இல்லை.

'என்ன நோன்பா பகலில் மட்டும்தானே சாப்பிடாமல் இருக்கின்றீhகள்? மாலையில் விதவிதமாக சாப்பிடுகின்றீர்கள் தானே' என்று அந்நியவர்கள் எம்மிடம் கிண்டலாகக் கேட்கும் நிலை உருவாகியுள்ளது.இந்த நிலையை உருவாக்கியவர்கள் நாங்கள் தான். நோன்பு துறக்கும் நேரத்தில் கேட்கப்படும் எந்த துஆவையும் இறைவன் நிராகரிப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நாம் புனிதமான இந்த பிரார்த்தனை வேளையில் இப்தார் விருந்து என்ற பெயரில் என்ன செய்து கொண்டிருக்கினறோம் என்பதை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்.

அந்நியர்களை இப்தார் விருந்துக்கு பள்ளிக்கு அழைத்தோம் அதை விட மோசமாக நம்மவர்கள் கடந்த காலங்களில் பௌத்த விகாரைகளுக்குச் சென்று நோன்பு துறந்த கவலைக்குரிய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றால் என்ன பிரயோசனம்? நாம் பிடித்த நோன்புகளும் நமது பெறுமதி மிக்க பிரார்த்தனை காலமும் வீணானதை தவிர வேறு பலன் கிட்டியதா என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

இனப்புரிந்துணர்வுக்கும் இன ஒற்றுமைக்குமான செயற்பாடுகள் கூடாது என்றோ முஸ்லிம் சமூகம் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடாது என்;றோ நான் சொல்லவில்லை.

ஆனால் அவற்றுக்கான காலம் றமழான் மாதத்தின் இப்தார் நிகழ்வுகள் அல்ல என்பதையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.அது எமக்கு மட்டும் பிரத்தியேகமான கடமை. எமது பிரார்த்தனைகள் அங்கிகரிக்கப்படுவதற்கான பிரத்தியேகமான நேரம் இவ்வளவு காலமும் வீணான பொருத்தமற்ற விருந்தோம்பல்களில் அதை வீணடித்துவிட்டதால் எமது பிரார்த்தனைகள் எற்றுக் கொள்ளப்படாமல் ஈருலகிலும் நட்டவாளிகளாவிட்டோம்.

இந்த வருடமாவது நாம் இப்தார் மாயையில் இருந்து விடபட்டு புனித றமழானை அதற்கே உரிய மகத்தவத்துடன் கழிக்க உறுதி பூனுவோமாக என்பதே எனது பணிவான வேண்டுகோள். இன ஒற்றுமைக்கான செயற்பாடுகளை வேண்டுமானால் நாம் நோன்பு கழித்து வரும் நோன்பு பெருநாளையும் அதனைத் தொடர்ந்து வரும் ஹஜ்ஜுப் பெருநாளையும் மையமாகக் கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளை நாம் வாழும் சூழலில் ஒழுங்கு செய்து கொள்ளலாம்.

இவ்வாறான நிகழ்வுகளுக்கு முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்க தேசிய ஐக்கிய முன்னணி தயாராக உள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நாம் றமழானில் இதுவரை கடைப்பிடித்து வந்த தவறான நடைமுறையைக் கைவிடுவோம். புதிய கலாசாரம் ஒன்றை தோற்றுவிப்போம். இந்தப் புனித றமழானை நற்காரியங்களிலும் பிராhத்தனைகளிலும் செலவிடுவோம்.

தற்போதைய இனவாத அரசின் கீழ் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் நீங்கி முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயம் புரிகின்றவர்கள் தமது தவறுகளை உணர எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையையும் நாம் இவ்வாண்டு றமழான் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்வோமாக.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by