அச்சுறுத்தல் காரணமாக மஹியங்களை பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டுள்ள
நிலையில், இன்று 2 ஆவது கிழமையாகவும் அங்கு ஜும்ஆ தொழுகை நடைபெறவில்லை.
மூடப்பட்டுள்ள பள்ளிவாசல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன்
பேச்சுநடாத்த ஆளும்கட்சியின் முஸ்லிம் எம்.பி.மார் மேற்கொண்ட முயற்சியும்
இதுவரை பலன்தரவில்லை. ஜனாதிபதியை சந்திப்பதற்கு கடந்த புதன்கிழமை
தீர்மானிக்கப்பட்ட போதிலும் இதுவரை உருப்படியான பதில் முஸ்லிம்
எம்.பி.க்களுக்கு கிட்டவில்லை.
அதேவேளை மஹியங்களை பள்ளிவாசலில் சுஜுத்து செய்ய ஆவலாக காத்திருப்பதாக
கண்ணீர் மல்கியவராக ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்ட அப்பள்ளிவாசல்
சபை தலைவர் சீனி முஹம்மது, அல்லாஹ்வின் இல்லம் மூடப்பட்டுள்ளதையிட்டும்,
அங்கு வணக்க வழிபாடுகள், புனித ரமழான் ஏற்பாடுகள் எதுவுமே நிறைவேற்ற
முடியாமல் இருப்பதையிட்டும் மிகுந்த மனவேதனையில் தான் காணப்படுவதாகவும்,
இதனால் தாம் மஹியங்கனையை விட்டே சென்றுவிட்டதாகவும்
அழுதபடியே குறிப்பிட்டார்.
அதேவேளை மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டதற்கு எதிராக இதுவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் எத்தகைய காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டதற்கு எதிராக இதுவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் எத்தகைய காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment