
கால்நடைகளை அறுப்பதற்கு தடை செய்யும் சட்ட மூலத்தை உருவாக்குமாறு சட்ட வரைவாளர் திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என சட்ட வரைவாளர் திணைக்களத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட வரைவு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் ஜனாதிபதி சிங்கள ராவய அமைப்பின் தலைவரிடத்தில் கால்நடைகளை அறுப்பதற்கு தடைகொண்டுவருவது தொடர்பான அவர்களது
கோரிக்கையைஉத்தேசிப்பதாகஉறுதியளித்திருந்தார்.
சிங்களம் ராவய அமைப்பினர் கால்நடை அறுப்பதற்கு இரண்டு மாதங்களுக்குள் தடை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை, வர்த்தக அமைச்சு ஏற்கனவே மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment