
மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கட்
விளையாட்டுப் போட்டியின் பின் நாடு திரும்பிக் கொண்டிருந்த இலங்கை
கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் குடிபோதையில் கழிப்பறைக் கதவு எனும்
நினைப்பில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது.
செயின்ற் லூசியாவிலிருந்து லண்டன் கட்விக்
விமான நிலையம் நோக்கிப் பறந்து கொண்டிருந்த BA 2158 இலக்க விமானத்திலேயே
குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு அவ்வேளையில் விமானத்தில் 229
பயணிகள் இருந்ததாகவும் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
சில நிமிடங்கள் நடந்தேறிய இந்த
பதட்டத்துக்குரிய சம்பவத்தினால் குறித்த கதவுக்கருகே ஒரு வயதுக்
குழந்தையுடன் இருந்த பெண்ணொருவர் பெருமளவு பயந்ததாகவும் விமானப்
பணியாளர்கள் வந்து குறித்த கிரிக்கட் வீரரை சாந்தப்படுத்தி
அழைத்துச்சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
விமானத்திற்குள் ஏறுவதற்கு நான்கு மணி
நேரத்திற்கு முன்பிருந்தே இலங்கை கிரிக்கட் அணியினர் போதையில்
மிதந்ததாகவும் பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ள அதேவேளை
அணியினர் கூச்சலிட்டு குறித்த வீரரை நிறுத்த முனைந்ததால் விமானத்தில்
பெரும் பதட்டம் நிலவியதாகவும் அறிய முடிகிறது.
அச்சமயத்தில் விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment