ரமழான் தலைப்பிறை அன்று இரவு பாலாவி பகுதியில் உள்ள வீடுகளுக்குள்
இனந்தெரியாதவர்கள் சென்றுள்ளனர். பாலாவி, பரீதாபாத், சேமமடு மற்றும் பாலாவி
கல்பிட்டி வீதியில் உள்ள சில வீடுகளிலும் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
றமழான் தலைப்பிறை இரவு 2-3 மணிக்குள் நான்கு விடுகளுக்குள் இனந்தெரியாத
நபர் புகுந்துள்ளனர்.
ஒரு வீட்டில் யண்ணல் கதவை கழட்டி உட்புகுந்து ஒரு பெண்ணின் ஆடையை எடுத்து வீட்டின் வேலியில் போட்டுவிட்டு தண்ணி கேனில் இருந்த தண்ணியை எடுத்து சவர்க்காரம் எடுத்து முகம் கழுவி சென்றுள்ளான். ஆனால் வீட்டில் கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்துள்ளனர். சஹர் நேரம்தான் தனது வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
தாய் தந்தை யாழ்பாணம் சென்றுள்ளனர். அன்றைய தினம் வீட்டில் வயது வந்த மகளும் அவரது சகோதரர் ஒருவரும் மாத்திரம் இருந்துள்ளனர். இரவு மூன்று மணி அளவில் யண்ணல் கம்பிகளை கழற்றி உட்சென்றுள்ளனர். ஆனால் டீவி, டெலிபோன் என்பன இருந்தும் ஒன்றையும் எடுக்கவில்லை. சகோதரன் திடீர் என சத்தம் கேட்டு எழும்பிய போது யண்ணல் வழியாக பாய்ந்து சென்றுள்ளான்.
இன்னும் ஒரு வீட்டில் தாயும் மூன்று பிள்ளைகளும் இருந்துள்ளனர். மிகவும் வறிய குடும்பம் யன்னலுக்கு கார்போட்டை வைத்து அடைத்து இருந்தனர். இவர்களின் வீட்டிலும் அந்த காட்போட் மட்டையை கழற்றி விட்டுள்ளனர். ஆனால் வீட்டிற்குள் வரவில்லை அவர்களுக்கும் சஹர் நேரம் எழும்பும் போதுதான் தெரியும். இச்சம்பவம் 2 மணியளவில் நடைபெற்றுள்ளதென்பது.
இன்னும் ஒரு வீட்டிற்கு சென்று யண்ணலை கழற்றிக்கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளான். ஆனால் அந்த வீட்டில் டெலிபோன், னுஏனு, டீவீ என்பன இருந்துள்ளது அவை ஒன்றையும் எடுக்கவில்லை அவ்வீட்டில் கணவன், மனைவி இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். அவர்களின் வீட்டிலும் ஒன்றும் களவு போகவில்லை. அவர்களுக்கும் விடிந்துதான் தெரியும் தனது வீட்டிற்கு இனந்தெரியாத நபர் வந்துள்ளனர் என்று. இச்சம்பவம் 11.30-12.30 நடைபெற்றுள்ளது.
இந்த பகுதி மக்கள் மனதளவிலும் உள ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு வேதனையுடன் நோன்பு நேரத்தில் இப்படியெல்லாம்; நடக்கின்றது என்று அங்கலாய்த்து கொண்டிருக்கும் வேலையில் அடுத்த நாள் பாலாவி கல்பிட்டி வீதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு 9 மணி அளவில் தாய் சமயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது யண்ணலால் கத்தியை காட்டி கதவை திறக்கும் படி கூறிய போது அந்த தாய் கதவை திறந்தில்லை. வீட்டில் இருந்தவர்கள் தராவீஹ் தொழுகைக்காக சென்று விட்டனர். இந்த தாய் மட்டும் தனிமையில் இருக்கும் போது இந்த நிலமை எற்பட்டுள்ளது. கதவை திறக்காத உறவினர்களுக்கு டெலிபோன் எடுத்த போது அவர்கள் வருவதை அறிந்த நபர் தப்பி சென்றுவிட்டான்.
நான்காவது நோன்பு அன்று பரீதாபாத் முகாமில் இன்னும் ஒருவரின் வீட்டில் காலை இரண்டு மணியில் இருந்து மூன்று மணிக்குள் இனந்தெரியாத நபர் நுழைந்து உள்ளனர் ஆனால் எவ்வாறு நுழைந்துள்ளான் என்று தெரியமலுள்ளது. எனினும் கணவன் மனைவி பிள்ளைகளுடன் தூங்கிக்கொண்டிருக்கும் போது இது நடைபெற்றிருக்கலாம் என நம்புகிறார்கள். வீட்டின் கதவு பூட்டப்பட்டு திறப்பு அதில் வைக்கப்பட்ட நிலையில் அந்த நபர் எப்படி வீட்டிற்குள் வந்துள்ளான் என்பது கேள்விக்குறியாக உள்ளது. வீட்டிற்குள் நுளைந்தது மட்டுமல்லாமல் டீவிக்கு மேலிருந்த பூச்சாடியினை சோபா செட் மீது வைக்கப்பட்டு கதிரைகள் எல்லாவற்றையும் நன்றாக அடுக்கப்பட்டுள்ளதுடன் மின் வசிறியும் போடப்பட்டடிருந்ததாம் இவர்கள் சஹர் நேரம்தான் இந்நிலமையை அவதானித்துள்ளனர். ஆனால் வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில் படுத்திருக்கும் போது எந்த வித சத்தமும் கேட்கவில்லை எனவும் ஏதாவது மயக்க மருந்து தெளித்ததில் நாம் அயர்ந்து தூங்கி இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்தார். ஆனாலும் அந்த வீட்டிலும் எவ்வித பொருளும் காணாமல் போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நோன்பு நேரத்தில் நிம்மதியாகவும் அமைதியாகவும் அல்லாஹ்வை தரிசிக்கும் காலத்தில் இப்படியான சம்பவங்கள் மிகவும் கண்டிக்கப்படவேண்டியதாகும். இதற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கிரீஸ் மனிதன் போல் இந்நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.
இரவு வேலையில் பெண்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் இருப்பதற்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலமையுடன் நிம்மதியாக தூங்கவும் முடியாத நிலை இப்பகுயில் நிலவகின்றது. ஏனைய கிராமங்களிலும் இவ்வாறு நடக்காது தடுப்பதற்கு முன்கூட்டியே எச்சரிக்கையாக மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவது றமழானுடைய காலத்தில் சிறப்பானது.
Post a Comment