Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

161 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றி

Wednesday, July 30 comments

161 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றி 

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின், முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கையும், 2-வது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி தொடர்ந்து 2 வெற்றிகளை கண்டுள்ளது.

இந்த நிலையில் கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட்டுடை மாத்திரம் இழந்து 348 ஓட்டங்களை விலாசியது.

இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க 174 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்த்தன 107 ஓட்டங்களையும் பெற்றுக்கெடுத்தனர்.

349 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி, 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்ளையும் இழந்து 187 ஓட்டங்ளை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்டார்.


Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by