Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் வாசித் தேசிய காங்கிரஸ் கட்சியியில் இணையவுள்ளார்?

Wednesday, July 30 comments

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் வாசித் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு தவிசாளரான வாசித், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை ஆகியோருடன் மிக நெருக்கமான உறவுடன் தற்போது செயற்பட்டு வருகின்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ஹக்கீமும் தனக்கும் தனது பிரதேசத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை. அமைச்சர் அதாஉல்லாதான் எல்லாமே செய்கின்றார். அவருடைய கரத்தை நாம் பலப்படுத்த வேண்டும் என்கின்ற மனநிலையோடு வாசித் இருப்பதாகக் கதைக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை இரண்டாவது தடவையாக அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்ததன் பின்னர் கூடுதலான நிகழ்வுகளையும், அபிவிருத்திப் பணிகளையும் பொத்துவில் சார்ந்த இடங்களில் செய்யவதாகக் கதைக்கப்படுகின்ற நிலையில் இதற்கான முழு ஒத்துழைப்புக்களையும் தவிசாளர் வாசித் செய்து கொடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

பொத்துவில் பிரதேசத்தில் உதுமாலெப்பை அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஒன்று தனது தேசிய காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது மற்றது தான் சார்ந்தவர்கள் கொந்தராத்து மூலம் பணம் உழைப்பதற்கு ஏதுவான இடம் என்பதால்.

தவிசாளர் வாசித்திற்கும் அமைச்சர் அதாஉல்லாவிற்குமிடையி;ல் அண்மையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அந்த சந்திப்பில் எதிர்காலத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியி;ல் தான் இணைந்து கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸில் இருப்பதாகவும் சந்தர்ப்பம் வருகின்றபோது பகிரங்கமாக தேசிய காங்கிரஸில் இணைவேன் என்ற கருத்தும் அங்கு பேசப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஏதாவது ஒரு தேர்தல் வருகின்ற பட்சத்தில் தான் களமிறக்கும் மூன்று வேட்பாளர்களில் வாசித்தையும் களமிறக்க அமைச்சர் அதாஉல்லா விருப்பம் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

தவிசாளர் வாசித் கட்ந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2010ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தவிசாளர் வாசித்தின் அண்மைக்கால செயற்பாடுகள் அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, தலைவர் ஹக்கீமின் கவனத்திற்கும் இந்த விடயத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் நம்பகரமாக தெரியவந்துள்ளது.

அக்கரைப்பற்றில் நோன்பு திறப்பதற்காக வந்த தலைவர் ஹக்கீமை அங்கு வரவிடாமல் தடுத்து, அட்டகாசம் புரிந்த அhஉல்லாவுக்கும், உதுமானுக்கும் மாலைபோட்டு கூட்டம் நடத்தும் வாசித்தை அடுத்த தேர்தலில் தோற்கடிப்போம் என கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் நம்மிடம் கருத்துத் தெரிவித்தார்.

இதேவேளை, நீங்கள் தேசிய காங்கிரஸ் கட்சியில் மாறப்போவதாக கதைகள் வந்துள்ளது.அதைப்பற்றி என்ன கூறுகின்றீர்கள் என வாசித்திடம் கேட்டோம் அதற்கு அவர் கூறிய கருத்துக்கள்,

நான் தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. என்மீது பொறாமை கொண்டவர்களின் கட்டுக் கதையாகும்.நான் உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் காரன். மரணிக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸில்தான் இருப்பேன் என்பதை உறுதியாகக் கூறவிரும்புகின்றேன் என்றார்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தரமான எதிரியுமில்லை என்பார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். வாசித் என்ன செய்யப்பொகின்றார்?
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by