Home சில்லறைப் பிரச்சினை தீர்வு: தனியார் பஸ்களில் பயணச்சீட்டுக்கு பதிலாக இன்று முதல் முற்கொடுப்பனவு அட்டை
சில்லறைப் பிரச்சினை தீர்வு: தனியார் பஸ்களில் பயணச்சீட்டுக்கு பதிலாக இன்று முதல் முற்கொடுப்பனவு அட்டை
தனியார் பஸ்களுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறைமை
முதல் தடவையாக இன்று முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று இலங்கை தனியார்
பஸ் உரிமையாளர் சங்கம் நேற்று தெரிவித்தது.
இந்த முற்கொடுப்பனவு அட்டை முறை ஹைலெவல் வீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள
மத்தேகொட, மஹரகம பஸ்களில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு முன்னோடித் திட்டமாக
ஆரம்பிக்கப்படவுள்ளது.
200 ரூபாவை வைப்புச் செய்து இந்த முதற்கொடுப்பனவு அட்டையை கொள்வனவு
செய்யலாம். தொலைபேசி முற்கொடுப்பனவுகள் போல இதனையும் பல்வேறு வழிகளில்
மீள்நிரப்பிக்கொள்ளலாம்.
பயணிகள் இந்த அட்டையை நடத்துனரிடம் கொடுக்க வேண்டும். அவர் அந்த அட்டையை
பயணச்சீட்டு இயந்திரத்தில் பஞ்ச்செய்து பயணச்சீட்டினை வழங்குவார்.
பயணிகளிடமிருந்து அறவிடப்படும் பயணக்கட்டணம் பஸ் உரிமையாளர்களின்
வங்கிக்கணக்கில் தானாகவே வைப்புச் செய்யப்படும்.
இந்த நடைமுறையின் ஊடாக பஸ் நடத்துனர்கள் செய்யக்கூடிய ஊழல்கள் பல
தவிர்க்கப்படும். பெரிய பிரச்சினையாகக் காணப்படும் சில்லறைப் பிரச்சினை
முற்றாக நீங்கிவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பஸ் நிறுவன உரிமையாளர் சங்கங்கள், தனியார் போக்குவரத்துச் சேவைகள்
அமைச்சு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்பன இணைந்தே இந்த
திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
Post a Comment