
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தீ விபத்து இன்று அதிகாலை 03.30 மணியளவில் நடைபெற்றிருப்பதாக ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ் அரபுக் கல்லூரியில் குர்ஆன் மற்றும் மார்க்ககக் கல்வியைக் கற்கின்ற மாணவர்களுக்கான இவ் வருடத்திற்குறிய தவனை விடுமுறை கடந்த 29ம் திகதி வழங்கப்பட்டு எதிர்வரும் 08ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் இனந்தெரியாதவர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் விடுதியில் இருந்த கட்டில்கள், உடைகள் வைக்கும் பெட்டிகள் உட்பட அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பில் இருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்டு வருகின்றது.



.
Post a Comment