Homeஇன்னும் சில தினங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!
இன்னும் சில தினங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!

தற்காலிகமாக
மூடப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீள
ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் அங்கு தரமான எரிபொருள் உற்பத்தி செய்யப்படுவ
தில்லை எனவும் அதனால் நாட்டில் இன்னும் ஒரு சில தினங்களில் எரிபொருள்
தட்டுப்பாடு ஏற்படும் எனவும் எரிபொருள் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள்
தெரிவித்துள்ளன.
இந்த நெருக்கடி நிலையை சீர் செய்ய அவசரமாக எரிபொருள்
கொள்வனவு செய்ய எரிபொருள் கூட்டுத்தாபனம் முயற்சிப்பதாக எரிபொருள்
கூட்டுத்தாபன தேசிய சேவை சங்க கிளையின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித
தெரிவித்துள்ளார்.
மே மாதம் 16ம் திகதி தற்காலிகமாக மூடப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கே 28ம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் வழமை நிலைக்குத் திரும்ப காலம் எடுக்கும் என அதன் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஆனாலும் எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாதென கனியவள அமைச்சு மறுப்புத் தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என சில தரப்பினர் பொய்யான
பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதாக கனியவள அமைச்சு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment