
மேலும், அரசு தனது ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில் மக்களிடையே இனவாதத்தினை ஏற்படுத்த காய் நகர்த்தி வருகின்றது. அதற்கு குறித்த பிக்குவின் தீக்குளிப்பு நல்லதொரு உதாரணமாக அமைகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் இன ஐக்கியத்தற்கு குந்தகம் விளைவிக்க மதத் தலைவர்கள் துணை போககக் கூடாது எனும் தலைப்பில் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இறைசிக்காக மாடறுப்பது மற்றும் பெளத்தர்களை மத மாற்றுவது போன்றவற்றுக்கு எதிராகவே குறித்த பெளத்த பிக்கு தீக்குளித்ததாக குறிப்பிடுகின்றது. பெளத்த அடிப்படைவாதத்தினை மேலோங்கச் செய்யும் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக செயற்பட்ட குறித்த பிக்கு சிறுபான்மையினரின் மதவுரிமைக்கெதிராகவும் செயற்பட்டவர் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
குறித்த பிக்கு காவியுடையுடன் தீக்குளித்த காட்சியை ஆரம்பம் முதல் இறுதிவரை வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு இவ்விடயம் தொடர்பில் நேர காலத்தோடு ஸ்தலத்திற்கு வந்து வீடியோ பதிவு செய்யப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வெறுமனே மாடறுக்கும் விடயம் மாத்திரம் காரணமாக இருக்க முடியாது. அப்படியானால் குறித்த பிக்கு தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன? அவர் தானே தீமூட்டிக் கொண்டாரா? இவர் தீமூட்டிக் கொள்வதற்கு அனுசரணையாக இருந்தவர்கள், ஏவிட்டவர்கள் யார் போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இதேவேளை, அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கெதிராக தொடுக்கப்பட்ட இனவாதத் தாக்குதல்களின் ஏற்பாடுகளைப் போன்று இதுவும் ஒரு வன்முறையா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. எனவே, அரசாங்கம் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு இனவாதத்துக்கு எதிராக தீர்க்கமான கொள்கையை ஏற்படுத்த வேண்டும். இனவாதிகளை கட்டப்படுத்தாமல் இனவாதத்தினை மேலோங்கச் செய்யும் வகையில் அரசு செயற்படுமானால் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.
இலங்கையில் இன்று பல பெயர்களைக் கொண்ட பெளத்த இனவாத அமைப்புகள் தோன்றியிருப்பதும் சில பிக்குகள் வீதியில் இறங்கி பெளத்த மதத்தை காப்பாற்றுவதாக கூறி கொண்டு மனிதாபிமானம், மனித உரிமை, மத உரிமை எதைப் பற்றியும் கருத்திற் கொள்ளாமல் மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் காலத்திற்கு காலம் சர்வ சாதாரணமாகவே நடைபெற்று வருகின்ற விடயங்களாகும். முஸ்லிம்கள் மாத்திரமே மாட்டை அறுப்பவர்கள் என்ற இனவாதக் கருத்தை முன்வைத்து மேற்கொள்ளப்படும் தற்கொலை நடவடிக்கைள் பெளத்த இனவாதிகளின் உச்க்கட்ட செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இனவாதிகளின் பொய்யான தகவல்கள் பெளத்த மதத்தையோ, மக்களையோ, நாட்டையோ காப்பாற்றாது.
குறித்த பெளத்த பிக்கு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முதல் நாட்டில் பல பாகங்களிலும் பொலிஸார் இறைச்சிக் கடைகளை திறக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு முரணான செயலாகும். மேலும், இனவாதிகளின் செயற்பாட்டுக்கு பொலிஸார் நேசக்கரம் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றது என்றார்.
Post a Comment