
இலங்கை சட்டக்கல்லூரி தமிழ் மன்றத்துக்கான 2014 ஆம் ஆண்டிக்கான
நிறைவேற்றுக்குழுவை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு விண்ணப்பம் நேற்று
முன்தினம் கோரப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் அடுத்த ஆண்டுக்கான தலைவர், செயலாளர், இதழாசிரியர் போன்ற
பதவிகளுக்கு முஸ்லிம் மாணவர்கள் தெரிவு செயப்பட்டுவிடக்கூடாது என்ற
நோக்கில் சில தமிழ் மாணவர்கள் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்ட முறையில் பல இரகசிய நடவடிக்கைகளை தற்போதைய நிறைவேற்றுகுழு
உறுப்பினர்களில் சிலர் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டும் இதே முறையில் முஸ்லிம் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்
அதையும் தாண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கு சட்டக்கல்லூரி தமிழ் மன்றத்தில்
அதிகாரம் செலுத்தும் தமிழ் மாணவர் ஒருவர் நேரடியாக தொலைபேசி மூலம்
மிரட்டல் விடுத்து சர்வாதிகார முறையில் அம்மாணவர்களின் விண்ணப்பங்களை
நிராகரித்தார்.
இந்நியமனங்களில் அவர் தொடர்ந்தும் கடும் போக்கை கையாண்டால் நூறுக்கும்
மேற்பட்ட முஸ்லிம் அங்கத்துவ மாணவர்கள் உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள
உத்தேசித்துள்ளதாகவும் அறியவருகிறது.
Post a Comment