ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத் இரண்டாவது முறையாக அதிபராக இருந்து
வருகிறார். அங்கு இந்த மாதம் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் அதிபர் அஹமதி நிஜாத்தும் அவரது அதிகாரிகள் குழுவும்
மசாந்தரானில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் குகைப் பாதையை திறந்து
வைக்க ஹெலிகாப்டரில் சென்றனர். வடக்கு மலைப்பாதை வழியாக ஹெலிகாப்டர்
சென்றபோது திடீரென கோளாறு ஏற்பட்டதாக விமானி கூறினார்.
இதனையடுத்து விமானி, ஹெலிகாப்டரை அந்த மலைப் பகுதியிலேயே அவசரமாக
தரையிறக்கினார். அவரின் சதூரியத்தால் ஈரான் அதிபர் அஹமது நிஜாத்தும், அவரது
அதிகாரிகள் குழுவும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர் என்று
கூறப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு அதிபர் கார் மூலம் தலைநகர் டெஹ்ரான் திரும்பினார்.
Post a Comment