ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்று இன்று (02) இடம்பெறவுள்ளது.
இன்று மாலை கட்சி தலைமையகத்தில் இக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறிப்பாக 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடை பெறும் வகையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கான கட்சியின் எதிர்ப்பை அரசிற்கு அறிவிப்பதற்கான நடைமுறைகள் குறித்து இதன்போது பேசப்படவுள்ளது.

Post a Comment