
கடந்த 18.03.2013 அன்று பிரசுரமான
கட்டுரையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பலவிதமான பகடிவதைகள்
நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக
மாணவியர்களே அதிகம் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை
உண்மைப்படுத்தும் முகமாக 01.05.2013 அன்று அக்கரைப்ப ற்று ஸாஹிரா
வித்தியாலயத்தில் ஒரு பகடிவதை முகாம் முற்றாக 2ம் வருட முஸ்லிம்
மாணவியர்களால் நிருவகிக்கப்பட்டு நடைபெற்றிருக்கிறது. ஒருசில ஆண் மாணவர்கள்
பார்வையாளர்களாக பங்குபற்றியுள்ளனர்.
Management Faculty( all are second year student):
4 ஆண் மாணவர்கள் 1 பெண் மாணவி
Arts Faculty( all are second year student):
5 பெண் மாணவிகள்
Management and Information Technology( all are second year student):
2 பெண் மாணவிகள் (ஒருவர் பள்ளிக்குடியிருப்பை சேர்ந்தவர்)
Faculty of Islamic Studies and Arabic Language( all are second year student):
4 பெண் மாணவிகள்
இவர்கள் அனைவரும் அக்கரைப்பற்றை சேர்ந்தவர்கள்.
இங்கு நடைபெற்ற பகடிவதைகள் வருமாறு:
- மாணவிகளுக்கு கோதுமை மாவை கரைத்து முகத்தில் பூசியுள்ளனர்.
- வேப்பிலையை அரைத்து முகத்தில் பூசியுள்ளனர்.
- வேப்பிலையை நீரில் கரைத்து பருக கொடுத்துள்ளனர்.
- மாணவிகளை மேடையில் பாட சொல்லி இன்னொருவர் மைக் பிடிப்பது போலும் இன்னொருவர் வீடியோ எடுப்பது போலும் நடிக்க செய்துள்ளனர்.
- பலூனை ஊதி வெடிக்க வைத்து மாணவியர்களை ஓடுமாறு பணித்துள்ளனர்.
- மாணவியர்களை பயிற்சி முகாமில் செய்தது போல் அணிநடை செய்ய பணித்துள்ளனர்.
- சங்கீத கதிரை போல் ஓட வைத்துள்ளனர்.
- மாணவிகளை பாடி ஆட பணித்துள்ளனர். மறுத்த மாணவிக்கு அடிக்க எத்தணித்து கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இந்த பகடிவதை முகாம் நடைபெற போவதை
முன்கூட்டியே பல்கலைக்கழக மாணவ ஆலோசருக்கு ஒரு தந்தை
தெரியப்படுத்தியுள்ளார். அவர் இதனை இன்னொரு விரிவுரையாளரை தொடர்பு கொண்டு
அறியப்படுத்தி குறிப்பிட்ட பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் அந்த
மாணவர்களை கலைந்து செல்லுமாறு பணித்துள்ளார். ஆனால் பல்கலைக்கழக நிருவாகம்
இந்த விடயத்தில் எதுவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காமல் அமைதியாகவே
இருந்து வருகிறது.
1. கறுத்த ஹபாயாவுடன் old fashion லேஸ்
வைத்த ஸ்காப் கறுப்போ வெள்ளையோ மட்டுமே அணிய வேண்டும். அத்துடன் ஸ்காபிற்கு
5 pin குத்த வேண்டும். அதை ஒவ்வொரு நாளும் எண்ணுவார்களாம்.
3. எக்காரணம் கொண்டும் குடை பிடிக்க கூடாது. எடுத்து வரவும் கூடாது.
4. மட்டையிலான 5 ரூபா பெறுமதியான பைல் உடன் 2 வெள்ளை பேப்பர் மட்டுமே எடுத்து வர வேண்டும்.
5. ஒரு பேனை மாத்திரமே எடுத்து வர முடியும். அதற்கு முக்கியமாக மூடி இருக்கவே கூடாது.
6. மாணவர்கள் வீட்டிலிருந்து வருவதாயினும் பகலுணவு எடுத்து வர கூடாது. Canteenல் மட்டுமே சாப்பிட வேண்டும்.
7. மாணவிகள் கைப்பை எடுத்து வர முடியாது. காசை கையிலேயே எடுத்து வர வேண்டும்.
8. மாணவிகள் கைலேஞ்சு பாவிக்க முடியாது. போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையிலேயே உள்ளன.
முக்கியமாக வீட்டிலிருந்து பஸ்ஸில் வரும்
மாணவிகளுக்கு பஸ்ஸினுள்ளேயே பகடிவதை கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது. இது
குறித்து பெற்றோர் ஒருவர் பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடும்
செய்துள்ளார். இந்த விடயத்தில் சமூகப் பெரியவர்கள், பெற்றோர்கள்,
பல்கலைக்கழகம் என்பன உடனடியாக தலையிட்டு கொண்டு வர வேண்டும். இது இவ்வாறு
நீண்டு செல்லின் பொலீஸாரை நாடுவதை விட வேறு வழியில்லை என ஒரு தந்தை
குறிப்பிடுகிறார். இனி நடைபெறும் விடயங்கள் உடனுக்குடன் சமூக
வலைத்தளங்களில் வெளிக்கொண்டு வரப்படும்.
Post a Comment