இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் ஆரம்பித்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி
மாநாட்டு இணையத்தளத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் தொகையைக்
குறைத்துக் காட்டும் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
வரும் நொவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொலன்வெல்த உச்சி மாநாடு
தொடர்பான தகவல்களை வழங்கும் அதிகாரபூர்வ இணையத்தளம் கடந்தவாரம் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
அதில், இலங்கை தொடர்பான விபரங்கள் இடம்பெற்ற பகுதியில், முஸ்லிம்களின்
தொகை, 9.7 வீதம் என்பதற்குப் பதிலாக, 7.2 வீதம் என்று குறைத்துக்
காட்டப்பட்டிருந்தது.
தவறான தரவுகள் பதிவேற்றப்பட்டது குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர்
வலைப்பதிவில் சுட்டிக்காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நான்கு நாட்களுக்குப் பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை இந்தத்
தரவுகள் திருத்தப்பட்டுள்ளன.எனினும், திருத்தம் செய்யப்படுவதற்கு
முன்னதாகவே அந்த இணையத்தளத்தை 10 ஆயிரம் பேர் பார்வையிட்டிருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Post a Comment