சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் கொண்டு
தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி அனுப்பியதாக கூறப்படும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தற்போது வேறு ஒரு பெயரில் பதிவு
செய்ய முற்பட்டபோது கண்டு பிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் ஊழியர் நலனோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரு வேறுபெயர்களில் குறித்த முகவர் நிறுவனம் செயற்படுவதாக
பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அடுத்து அது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்ட அமைச்சர் டிலான் பெரேரா
தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
Post a Comment