Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

வடமாகாண சபை தேர்தலில் தனித்துபோட்டி :ஹஸன் அலி திட்டவட்டம்

Monday, May 130 comments

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலில் எக்காரணம் கொண்டும் அரசுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடப்போவதில்லை. மாறாக வடக்குத் தேர்தலில் மு.கா. தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தெரிவித்தார்.

காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்க அரசு மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வேளையிலும் ஆதரிக்காது. அவ்வாறு அவற்றை நீக்குவதற்கு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அரசு கொண்டுவந்தால் அதனை மு.கா. ஆதரிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வட மாகாண சபைத் தேர்தலானது காணி, பொலிஸ் அதிகாரங்களுடனேயே நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார்.
வட மாகாண சபை தேர்தல் மற்றும் 13ஆவது திருத்தம் தொடர்பில் விடிவெள்ளியிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபை தேர்தலைப் பொருத்தவரை மு.கா. ஒரு போதும் அரசுடன் இணைந்து போட்டியிடாது. ஏனெனில் இதற்கு முன்னர் பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் அரசுடன் இணைந்து நாம் போட்டியிட்டிருந்தோம்.

எனினும் அரசு குறித்த ஒப்பந்தங்களையும் நிபந்தனைகளையும் உதாசீனம் செய்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையிலோ அல்லது நிபந்தனையின் அடிப்படையிலோ அரசுடன் இணைந்து போட்டியிட நாம் ஒருபோதும் தயாரில்லை. ஏனெனில் நாம் கடந்த காலங்களில் பாடம் கற்றுக் கொண்டோம்.

எனவே, வட மாகாண சபை தேர்தலில் அரசுடன் இணைந்து மு.கா. போட்டியிடுவதென்பது ஒரு போதும் சாத்தியப்படாது. அதனை மு.கா.வின் ஆதரவாளர்களும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எது எவ்வாறாயினும் மு.க.ா வட மாகாண சபை தேர்தலில் அரசு உள்ளிட்ட எவருடனும் இணைந்து போட்டியிடாது.
அத்துடன், வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னரோ அதன் பின்னரோ காணி, பொலிஸ் அதிகாரங்களை பறிக்கும் விதமாகவும் 13ஆம் திருத்தத்தை ஒழிக்கவும் அரசு மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் ஆதரிக்கப் போவதில்லை.
13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் போதாது என்பதே மக்களின் நிலைப்பாடு, இந்நிலையில் குறித்த காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்கமாட்டோம்.

அந்த அடிப்படையில் காணி, பொலிஸ் அதிகாரங்களை பறிக்கும் விதமாக கொண்டுவரப்படும் எந்தவொரு திருத்தச்சட்டம், சட்டமூலத்துக்கும் மு.கா. ஒரு ேபாதும் ஆதரவு வழங்காது. அதனை எதிர்த்தே மு.கா. செயற்படும்.
ஜனாதிபதியை சந்திப்பதற்கான கால அவகாசத்தை நாம் அவரிடம் கோரியுள்ள நிலையில் இன்னும் எமக்கு நேரமொன்று ஒதுக்கப்படவில்லை. அவ்வாறு ஜனாதிபதியை நாம் சந்திக்கும் போது காணி, பொலிஸ் அதிகாரம் குறித்தும் நாம் பேசுவோம்.
எவ்வாறாயினும் குறித்த அதிகாரங்களை நீக்குவதற்கு அரசு முயற்சித்தால் அரசின் பங்காளி கட்சி என்றவகையில் எம்மிடம் கண்டிப்பாக அது தொடர்பில் கதைத்தே ஆகவேண்டும்.

எனவே, எவ்வகையிலும் காணி, பொலிஸ் அதிகாரங்களையோ 13ஆவது திருத்தத்தையோ நீக்க அரசுக்கு மு.கா. ஒருபோதும் ஆதரவளிக்காது என தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் பி.பி.சி. தமிழோசைக்கு கருத்து வெளியிட்டுள்ள மு.கா. செயலர் ஹஸன் அலி
மாகாண சபைகளின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அல்லது இல்லாது ஆக்கும் என்கிற காரணத்தாலேயே 19ஆவது திருத்தத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது கட்சி 13ஆவது அரசியல் திருத்தத்தில் கை வைப்பதற்கு எந்த வகையிலும் துணை போகாது,
தற்போது இருக்கின்ற 13ஆவது சட்டத் திருத்தமே முழுமையான அதிகாரப் பரவலாக்கம் அல்ல என்பதே கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நீதித்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் 19ஆவது திருத்தச் சட்டத்தை முன்மொழிந்தாலும் அதை எமது கட்சி எதிர்க்கும் என்றும் மு.கா. செயலர் பி.பி.சி. தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by